ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவை, ‘போலியோ’ இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்கன், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்னும் போலியோ பாதிப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், சோமாலியாவில், அரசின் தீவிர முயற்சியால் போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது. 2014க்கு பின், சோமாலியாவில், போலியோ பாதிப்பு ஏற்படாதது உறுதி செய்யப் பட்டது.
இதையடுத்து, சோமாலியாவை, போலியோ இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனத்தின் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்தியத்துக்கான தலைவர், முகமது பிகி அறிவித்தார்.