திமுக தலைவர் கருணாநிதியின் சொத்துப்பட்டியல் விபரம் குறித்த தகவல்கள் வாட்ஸ் அப்பில் வலம் வந்துள்ளது.
- 6,124 சதுர அடி பரப்பளவு கொண்ட கருணாநிதியன் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு – 5 கோடி ஆகும்.
- போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம்.இண்டஸ்ட்ரீஸ் மதிப்பு – 2 கோடி ஆகும்.
- 6 கிரவுண்டர் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் முரசொலி அலுவலக கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி ஆகும்.
- தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் இடம் – 21.30 ஏக்கர் ஆகும்.
- கூர்க் (குடகு மலை) காபி தோட்டம் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
- சென்னை சிஐடி காலனியில் 9,494 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் 3,500 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் இராஜத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி ஆகும்.
- மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு – 4.5 கோடி ஆகும்.
- ராயல் பர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷொப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி ஆகும்.
- மதுரை மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு தெரியவில்லை.
- திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3,84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி ஆகும்.
- கோரமண்டல் சிமெண்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி ஆகும்.
- கருணாநிதி 2006 பொதுத்தேர்தலின் போது கூறிய சொத்து மதிப்பு ரூபாய் 44,14,93,770
- கருணாநிதி 2011 பொதுத்தேர்தலின் போது கூறிய சொத்து மதிப்பு ரூபாய், 26,57,62,881
- கருணாநிதி 2016 பொதுத்தேர்தலின் போது தெரிவித்த சொத்து மதிப்பு 13.42 கோடி. அவரது மனைவி மற்றும் துணைவியின் சொத்துமதிப்பாக குறிப்பிட்டது 45.34 கோடி.