இந்தியாவில் மனிதர்களுக்கு இருப்பது போலவே கண், காது, மூக்கு கொண்டு பிறந்த பசுவை கடவுளின் அவதாரம் என வணங்கும் மக்கள் அதற்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் பசு மாடு ஒன்று கன்று போட்டுள்ளது.
கன்றுக்குட்டியின் முகத்தில் உள்ள கண், மூக்கு, காது ஆகியவை மனிதர்களை போலவே இருந்துள்ளது.
இதை அதிசயமாக பார்த்த ஊர் மக்கள், கன்றுக்குட்டி கடவுளின் அவதாரம் என வணங்கத் தொடங்கியுள்ளனர்.
ஆயினும் கன்றுக்குட்டி பிறந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளது. பின்னர் அதை கண்ணாடி பெட்டியில் வைத்து மக்கள் கடவுளாக வணங்கி அதன் மீது பூமாலை அணிவித்தார்கள்.
இதுகுறித்து Mahesh Kathuria (50) என்னும் நபர் கூறுகையில், கடவுள் தான் இந்த கன்றுக்குட்டி வழியாக மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார்.
இது விஷ்ணுவின் அவதாரம், ஆசிர்வாதம் வாங்கவே எல்லோரும் இங்கு வந்துள்ளோம் என கூறியுள்ளார்.
மாடுகள் காப்பகத்தின் மேலாளர் Raja Bhaiya Mishra (55) கூறுகையில், இன்னும் மூன்று நாட்களில் இறந்து போன கன்றுக்குட்டியை எரிப்போம், அதன் பின்னர் கன்றுகுட்டிக்கு கோவில் கட்டப்படும் என கூறியுள்ளார்.
ஆனால், இது மூடநம்பிக்கை என விலங்குகள் சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கால்நடை மருத்துவரான Ajay Deshmukh கூறுகையில், உடற்கூறியல் முரண்பாட்டால் கன்றுக்குட்டி இப்படி பிறந்துள்ளது.
மரபணுவில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அது பல கட்டமைப்பு குறைபாடுகளை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.