நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது 24 மில்லியன் டொலர்கள் பணமதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, மொத்தமாக 22 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் இரண்டு தாக்குதல் துப்பாக்கிகளும், ஒரு இலகு இயந்திரத் துப்பாக்கியும் அடங்குவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் ஆயுதப் பாவனை தொடர்பில் மொத்தம் 28 பேர் மீது குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முடிவுக்கு வந்துள்ள விசாரணைகளின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.