இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் விடுவிக்கப்பட்டனர்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் டிடிவி தினகரன்.
இதனிடையே டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது.
இருவரும் ரூ.5 லட்சம் பிணைத்தொகை செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளித்து திஸ் ஹசாரே நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் திஹார் சிறையில் இருந்து டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா விடுவிக்கப்பட்டனர்