1992ல் இளம் பெண்களை-பாடசாலை மாணவிகள்- கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கொலையாளியான கார்லா ஹொமொல்கா பாடசாலை ஒன்றில் தன்னார்வ தொண்டராக பணியாறுவதுடன் கல்வி சுற்றூலாவில் மாணவர்களை கண்காணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவின் போது தனது நாயை மாணவர்களுடன் ஊடாட விட்டதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கனடிய பாடசாலைபெண்களை கொன்றவர் என இவர்மீது குற்றம் சாட்டப்பட்டு 12-வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றவர். மொன்றியல் தொடக்க பள்ளி ஒன்றில் தன்னார்வ தொண்டராக பணியாற்றுகின்றனர்.
ஊடக அறிக்கைளை தொடர்ந்து இவரது இத்தகைய நட வடிக்கைகள் மொன்றியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் Notre-Dame-de-Grâce பகுதியில் அமைந்துள்ள தனியார் கிறிஸ்ரியன் ஆரம்ப பள்ளியில் இவர் பணியாற்றுகின்றார்.
ஏழாவது நாள் அட்வென்டிஸ்ட் தேவாலம் இப்பாடசாலையை நடாத்துகின்றது. கார்லா வழக்கமான தொண்டர் இல்லை எனவும் பிள்ளைகளுடன் தனியாக விடப்படுவதில்லை எனவும் தேவாலயம் தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக கருத்து வேண்டிய கனடியன் பிரசிற்கு பாடசாலை உடனடி பதில் எதனையும் தெரிவிக்கவில்லை.
1990-ன் ஆரம்ப கால பகுதியில் ஹொமொல்கா மற்றும் அவரது அப்போதைய கணவர் போல் பெர்னாடோ இருவரும் இரு பாடசாலை மாணவிகளான கிறிஸ்ரின் விரெஞ்ச் மற்றும் லெஸ்லி மஹாவி ஆகிய இருவரையும் கற்பழித்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. பெர்னாடோ ஒரு ஆபத்தான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஹொமொல்கோ வழக்கறிஞர்களுடனான ஒரு ஒப்பந்தத்துடன் 1993-ல் 12வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் பெர்னாடோ தன்னை தவறான முறையில் பயன்படுத்தியதாகவும் மாணவிகளை கொலை செய்ய தன்ளை கூட்டாளியாக்கியதாகவும், இருந்தும் பின்னர் வீடியோ ஆதாரத்தில் தான் செய்தவைகளை விட மிக மோசமான பாத்திரத்தில் தன்னை சித்தரித்து காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹொமொல்காவின் அண்மித்த நடவடிக்கை குறித்து அரசியல் வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஹொமொல்காவின் தன்னார்வ தொண்டு அறிக்கை நீதி அமைப்பு “உடைந்து” விட்டதென காட்டுகின்றதென தெரிவிக்கப்பட்டது.