சிறு குழந்தைகள், பாலர்களின் திரை பாவனைகளை குறைக்க வைத்தியர்கள் கோரிக்கை!

பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகள் திரைக்கு முன்னால் செலவிடும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க பெற்றோருக்கு அறிவுறுத்துமாறு மருத்துவ சேவை பிரிவினர்களை கனடிய மருத்துவர்களை  கனடிய குழந்தை மருத்துவர்களை பிரதிநிதிப்படுத்தும் குழு   வலியுறுத்துகின்றது. அதற்கு பதிலாக வேறு விளையாட்டுகளிலும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதற்கு அவர்களை ஈடுபடுத்துவதற்கும் அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைக்கு முன்னால் அதிக நேரம் அவர்களது பிள்ளைகள் செலவிடும்-வரைப்பட்டி தொகுதிகள் தொலைக்காட்சிகள் மற்றும் கணனிகள்-நேரத்தை குறைக்க பரிந்துரைக்க வேண்டும் என கனடிய குழந்தை மருத்துவ சொசைட்டி வைத்தியர்களிடம் கேட்டு கொண்டுள்ளது.
இரண்டு முதல் ஐந்து வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகள் நாளொன்றிற்கு ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவானதாக கட்டுப்படுத்துவது சிறந்ததென தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வயதிற்குட்பட்டவர்கள் திரைக்குப்பின்னால் இருப்பதை ஊக்குவிக்காமல் இருப்பது சிறந்ததெனவும் கூறப்படுகின்றது.
அதுமட்டுமன்றி படுக்கைக்கு போவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே திரைகளை நிற்பாட்ட வேண்டும்.
மொழி மற்றும் ஆக்கச்சிந்தனை, சுறுசுறுப்பான விளையாட்டுக்கள் மற்றும் குடும்ப நேரம் போன்றனவற்றில் ஐந்து வயதிற்கும் குறைவான பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும்.
காலநிலை சிறப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பராமரிப்பாளர்கள் சிறுவர்களை வெளியில் விளையாட விடுவதும் சிறந்ததாகும்.
முடிந்த நேரங்களில் வயதிற்கு பொருத்தமான திரை உள்ளடக்கங்களை கவனிப்பதற்கும் பார்ப்பவைகள் குறித்து கடினமான கேள்விகளை கேட்பதற்கும் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள்
அறிவுறுத்தப்படுகின்றனர்.

screenscreen1

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *