2019 ஜனவரி முதல் ஒன்ராறியோவின் குறைந்த பட்ச ஊதியம் அதிகரிக்கின்றது!

ரொறொன்ரோ-2019-ஜனவரியிலிருந்து ஒன்ராறியோவில் குறைந்த பட்ச மணித்தியால ஊதியம் 15 டொலர்களாக அதிகரிக்கப்டும் என லிபரல் அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு பகுதி நேர ஊழியர்களிற்கும் அதிகரிக்கும். இது மட்டுமன்றி குறைந்த பட்ச விடுமுறை உரிமமும்- தொழிலாளர் மாற்றியமைப்பின் ஒரு பகுதியாக-அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கத்லின் வின் இன்று இந்த அறிவித்தலை செய்துள்ளார்.இந்த அதிகரிப்பு மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
2018-ஜனவரியில் குறைந்த பட்ச ஊழியம்  மணித்தியாலத்திற்கு 14 டொலர்களாக அதிகரிக்கப்பட்டு அடுத்த வருடம் மணித்தியாலத்திற்கு 15-டொலர்களாக அதிகரிக்கப்படும் எனவும் கூறினார்.
பகுதி நேர ஊழியரகளும் சமமான ஊழியத்தை பெறுவர். குறைந்த பட்ச விடுமுறை உரிமம் ஊதியத்துடன் இரண்டு வாரங்களிலிருந்து மூன்று வாரங்களாக அதிகரிக்கப்படும். இந்த மூன்று வார ஊதியத்துடனான விடுமுறை கம்பனி ஒன்றில் ஐந்து வருடங்கள் பணியாற்றிய பின்னர் வழங்கப்படும்;.
ஊழியர் ஒருவர் தங்கள் வேலை மாற்றத்தை 48 மணித்தியாலங்களிற்குள் இரத்து செய்தால் மூன்று மணித்தியாலத்திற்கான ஊதியம் வழங்கப்படுமெனவும் கூறப்படுகின்றது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *