கொலை வழக்கில் மணிப்பூர் மாநில முதல்வரின் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மணிப்பூர் விசாரணை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
மணிப்பூர் மாநில முதல்வர் என்.பிரன் சிங்கின் ம கன் அஜய் மீட்டாய். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தமது வாகனத்தில் அவசர வேலை நிமித்தம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே சாலையில் ரோஜர் என்ற இளைஞரும் தமது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அஜய் மீட்டாய், ரோஜரின் காரை முந்திச்செல்ல முயன்றார். ஆனால் ரோஜர் காருக்கு வழிவிடவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் மீட்டாய் ரோஜரை துப்பாக்கியால் சுட்டத்தில் ரோஜர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு மணிப்பூர் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த வழக்கு விசாரனை உரிய முறையில் நடைபெறவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக ரோஜரின் தாயார் ஐரோம் சித்ரா தேவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மே 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.
இதனையடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட மணிப்பூர் நீதிமன்றம் அஜய் மீட்டாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்ப்பட்டுள்ளது. கொலை வழக்கில் அஜய் மீட்டாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.