TAORMINA, Italy –பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ சனிக்கிழமை டொனால்ட் டிரம்பை நேரடியாக சந்திக்கின்றார். சிசிலியில் இடம்பெறும் ஜி7 உச்சி மகா நாட்டில் மற்றய தலைவர்களுடன் காலநிலை மாற்றம் மற்றும் சுதந்திர வர்த்தகம் குறித்து மோதிக்கொண்டிருக்கும் யு.எஸ் அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் மகாநாட்டின் ஒரு பகுதியாக கனடிய பிரதமர் டிரம்பை நேரடியாக சந்தித்து பேச உள்ளார்.
கடந்த வாரம் டிரம்ப் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக வலயம் குறித்த பரிசீலனைக்கு கவுன்டவுன் ஆரம்பித்த வெள்ளை மாளிகையின் புதிய மனிதனுடன் சில நிமிடங்களை செலவிட எண்ணியுள்ளார் ட்ரூடோ.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரொன், பிரிட்டிஸ் பிரதம மந்திரி திரோசா மே மற்றும் ஜப்பான் பிரதம மந்திரி ஷின்சோ எப் ஆகியோருடனும் உச்சிமகாநாட்டின் போது கலந்துரையாடியுள்ளார்.
ரோமிற்கு பயணமாகும் போத இத்தாலிய பிரதம மந்திரி பவ்லோ ஜென்ரிலோனியையும் சந்திக்கவுள்ளார்.