கிட்டத்தட்ட 50 சதவிகிதமான ரொறொன்ரோ ஐலன்ட் மழை வெள்ளத்தினால் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று வாரங்களாக ஐலன்டின் வழக்கமான நீர் மட்டம் அதிகரித்த நிலையில் காணப்பட்டிருந்த வேளையில் வியாழக்கிழமை கொட்டிய மழையினால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியாழக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் ரொறொன்ரோ ஐலன்டில் 55-மில்லிமீற்றர்கள் மழை பெய்துள்ளதாக கனடா சுற்று சூழல் அறிவிக்கின்றது.
40-சதவிகிதமான ஐலன்ட் தண்ணீருக்குள் எனவும் 50-சதவிகதமான கட்டிடங்கள் வெள்ள ஆபத்தில் சிக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது கிட்டத்தட்ட 50சதவிகிதமென தெரிவிக்கப்படுகின்றது. லேக் ஒன்ராறியோவிலிருந்தும் தண்ணீர் பாய்ந்துள்ளதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மழைகாரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பிரச்சனை குடியிருப்பு பகுதிகளையும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிப்ரால்டர் பொயின்ட் முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் அலைகளின் வேகம் ஐலன்டின் பிரதான வீதியான சென்ர வீதியையும் மூடிவிட்டது. வார்ட் தீவில் 30முதல் 50சென்ரி மீற்றர்கள் அளவிலான நீர்மட்டம் றோயல் கனடியன் யாச்ட் கிளப் மற்றும் ரொறொன்ரோ தீயணைப்பு நிலையம் ஆகியனவற்றிலும் நீர் புகுந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.
ரொறொன்ரோ பீச் பகுதியிலம் வீடுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. வூட்பைன் பீச் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
உயரும் நீர் மட்டத்தை கட்டுப்படுத்த 20,000ற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் கரையோரங்களில் வைக்கப்பட்டுள்ளது.