பிரித்தானிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தீவிரவாதி தனது தாயாரை தொடர்புக்கொண்டு மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மான்செஸ்டர் நகரில் கடந்த திங்கள் இரவு சல்மான் அபேடி என்ற தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலுக்கு பின்னர் பொலிசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.
தீவிரவாதியின் தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
லிபியாவில் இருந்த தீவிரவாதியின் தந்தை மற்றும் சகோதரரை பொலிசார் கைது செய்தபோது அவர்களுக்கு ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
அதில், ‘மான்செஸ்டர் நகரில் தாக்குதல் நடத்துவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் சல்மான் அபேடி தனது தாயாரை செல்போனில் தொடர்புக்கொண்டுள்ளான்.
தீவிரவாதியின் தாயார் அணு ஆயுதங்களை ஆராயும் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
தாயாரை தொடர்ப்புக்கொண்டபோது ‘அம்மா….என்னை மன்னித்து விடுங்கள்’ என உருக்கமாக பேசிய பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளதாக லிபியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு வெற்றியை தேடி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்துவது குறித்து திட்டமிட்டு வந்துள்ளான்.
இணையத்தளம் வழியாக வெடிகுண்டுகளை எப்படி தயாரிப்பது, அவற்றை எப்படி வெடிக்க வைப்பது உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.