ரொறொன்ரோ- ஐந்து வயதுடைய பையன் ஒருவன் புதன்கிழமை இரவு லேக் ஷோர் புளுவாட் பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட உயிரிழந்தான்.
ஜேம்சன் அவெனியுவில் பாரக்டேலில் சைக்கிளில் சென்று கொண்டிருக்கையில் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த போது வந்த கொண்டிருந்த கார் ஒன்றினால் மோதப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.புதன்கிழமை மாலை 6.15மணியளவில் இவ்விபத்து நடந்துள்ளது.
சிறுவனுக்கு உதவ பலர் விரைந்த போதிலும் அவனிற்கு ஏற்பட்ட காயங்களினால் சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதும் இறந்துவிட்டான் என ரொறொன்ரோ பொலிஸ் சேவைகளின் போக்குவரத்துவரத்து சேவைகள் பேச்சாளர் கான்ஸ்டபிள் கிளின்ட் ஸ்ரிப்பே தெரிவித்தார்.
விபத்து நடந்த சமயம் சிறுவன் அவனது தாத்தாவுடன் இருந்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சில்வர் நிற ரொயொட்டா கம்ரி வாகனம் விபத்தில் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் பின்னர் வாகனம் அவ்விடத்தில் நின்றுவிட்டது.
2017 ல் இடமபெற்ற 24-வது வீதி இறப்பு இதுவென பொலிசார் தெரிவித்தனர். சிறுவர்கள் வீதியில் நடந்து செல்கையில் அல்லது சைக்கிளில் செல்கையில் பெற்றோர் அல்லது எவராவது அவர்களுடன் அருகில் இருப்பது அவசியம் என பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்து சம்பந்தமாக குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை என தெரியவருகின்றது.