பலமான குளிர் காற்றான காலநிலை வெடிப்பினால் பிரிட்டிஷ் கொலம்பியா பலமாக தாக்கப்பட்டதால் மாகாணம் பூராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
பசுபிக் நேரப்படி அதிகாலை 3.45 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 40,000ற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
பிரின்ஸ் ஜோர்ஜ், குயிஸ்னெல், முழு சுஸ்வப் பிரதேசம், பார்க்ஸ்வில், பென்டர் தீவு, ஓக் பே, சானிச் மற்றும் லோவ மெயின்லான்ட் ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மணித்தியாலத்திற்கு 90கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசும் காற்றானது மெற்ரோ வன்கூவர் மற்றும் உள்ளடங்கிய பகுதிகளையும் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. காற்று தொடர்வதால் மின்சாரம் மேலும் துண்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.