ரொறொன்ரோ –மான்செஸ்டர், இங்லாந்தில் அரியானா கிரான்டே இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை தொடரந்து ரொறொன்ரோவின் எயர் கனடா சென்ரரின் பாதுகாப்பு பலப்படுத்த திட்டமிடப்பட்டது.
எயர் கனடா சென்ரரில் இடம்பெறும் நிகழ்வுகளிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனவும் மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் இருப்பார்களெனவும் Maple Leaf Sports & Entertainment, எயர் கனடா சென்ரர் சொந்த காரரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை மான்செஸ்ரரில் 22 மக்கள் பலியாகி வெகுஜன பீதியை ஏற்படுத்திய கொடிய வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இத்தாக்குதலில் பலியானவர்களில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டவர் 18வயதுடைய ஜோஜினா கலென்டர் எனப்படும் 18-வயதுடைய பெண்ஆவார்.
8-வயது சிறுமியும் கொல்லப்பட்டுள்ளாள்.