பிரித்தானியாவில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் போன்று வேடமிட்ட நபர்கள் ஒன்றாக இராணுவ டேங்கரில் வந்திறங்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் blackpool நகரத்திலே இந்நிகழ்வு நடந்துள்ளது. குறித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் போல் வேடமிட்ட நபர்கள் இராணுவ டேங்கரில் வட கொரியா கொடியை கையில் ஏந்திய படி ஒன்றாக வந்திறங்குகின்றனர்.
இதுகுறித்து வாகனத்தை ஓட்டி வந்த வாகனத்தின் உரிமையாளரும், முன்னாள் இராணுவ வீரருமான Rob Dove கூறியதாவது, தனது இரண்டு நண்பர்களின் ஆசைக்காக Peterleeயில் உள்ள கத்தோலிக்க கால்பந்து கிளப்பிற்கு அவர்களை இவ்வாறு அழைத்து வந்தேன்.
கத்தோலிக்க கால்பந்து கிளப்பில் நடக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு அந்த அணியின் ஒவ்வொரு வீரர்களும் வித்தியாசமான பல கதாபாத்திர வேடமிட்டு வந்துள்ளனர்.
இதில் பங்கேற்கதான் தனது இரண்டு நண்பர்களும் இவ்வாறு வேடமிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகியுள்ளது.