கனடாவில் வலி மாத்திரை எடுத்துக்கொண்ட 113 பலியாகியுள்ளனர்

கனடா நாட்டில் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்டதன் விளைவாக 113 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில் உள்ள அல்பேர்ட்டா மாகாணத்தில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அல்பேர்ட்டா மாகாண சுகாதார துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், உடல் நலக்குறைவு காரணமாக fentanyl என்று அழைக்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இம்மாத்திரைகளின் விளைவால் 2017-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 113 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் கல்கேரி பகுதியில் 51 பேரும், எட்மோண்டன் பகுதியில் 36 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே மாதங்களில் கடந்தாண்டு 70 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த மாத்திரைகளை அதிகளவில் எடுத்துக்கொண்டதன் விளைவாக 476 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுக் குறித்து மருத்துவரும் லிபரல் கட்சி தலைவருமான David Swann என்பவர் பேசுகையில், ‘இந்த உயிரிழப்புகளை தடுக்க அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஏமாற்றமாக இருக்கிறது.

பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்த உயிரிழப்புகளை தடுக்க அவசர நிலையில் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *