ரொறொன்ரோ-புதன்கிழமை அதிகாலை பிரம்ரனில் காணாமல் போயுள்ள தீங்கு விளைவிக்க கூடியதென கருதப்படும் அணு சாதனம் ஒன்றை தேடும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இச்சிறிய சாதனத்தில் ஆபத்து விளைவிக்க கூடிய கதிரியக்கப்பொருள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்சன் வீதி மற்றும் கார்லிங்வியு டிரைவ் பகுதியில் காலை 6மணி மற்றும் இரவு 8மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பிக்அப் டிரக் வண்டி ஒன்றில் கடைசியா காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இச்சாதனம் பிரகாசமான மஞ்சள் நிற கொள்கலன் ஒன்றிற்குள் வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து அணு பாதுகாப்பு கமிசனிற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கதிர்வீச்சு ஒரு கவலையாக உள்ளதென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச்சாதனம் மிகவும் ஆபத்தானதென செய்தி வெளியீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சாதனம் குறித்த-சாதனம் இருக்குமிடம்-தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் 416-808-2300 அல்லது Crime Stoppers 416-222-8477 இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.