150,000 நன்கொடைகளின் எதிர்பார்ப்புடன் கனடா இரத்த சேவைகள் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வருடத்தின் பனிப்புயல் மற்றும் ஈரப்பதனான இலைதுளிர் காலம் இரத்த இருப்பை மிகவும் குறைவடைய செய்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
லண்டன், ஒன்ராறியோவில் தகுதியான நன்கொடையாளர்களை இரத்த சேவைகள் எதிர்பார்க்கின்றன.
இந்த வருடம் யூலை 1-அளவில் கனடா பூராகவும் 150,000இரத்த நன்கொடைகளை எதிர்பார்ப்பதாக கனடா இரத்த சேவைகள் தெரிவித்துள்ளன.
உங்களின் நேரத்தில் நீங்கள் இரத்தம் கொடுப்பதற்கு ஒரு மணி நேரத்தை செலவிடுவது வைத்தியசாலை ஒன்றில் நோயாளி ஒருவர் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை உபயோகிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய மக்கள் தொகையில் அரை வாசியானவர்கள் இரத்தம் வழங்குவதற்கு தகுதியானவர்களாக இருக்கின்ற போதிலும் ஆக நான்கு சதவிகிதமானவர்கள் மட்டுமே இரத்த தானம் செய்கின்றனரென அமைப்பின் பிரகாரம் தெரிய வந்துள்ளது.
Type-O இரத்தம் அதிக அளவு தேவைப்படுகின்ற போதிலும் நன்கொடையாளர்கள் அனைவரும் உடனடியாக நியமன திகதிகளை பதிவு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இரத்தம் நன்கொடை செய்ய விரும்புபவர்கள் இரத்த நன்கொடை கிளினிக் லண்டன் நிரந்தர மையம் 820- வார்ன்கிளிவ் வீதி தெற்கு என்ற விலாசத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.