ரொறொன்ரோ ஐலன்ட் கட்டமைப்புக்களின் அரைவாசி அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக உயர்வடைந்துள்ள நீர்மட்டத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசுவதற்காக ஊடகங்களை மேயர் அழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்கிழமை சுற்றுலா பயணிகள் மட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறொன்ரோ ஐலன்ட்டின் பார்க் பகுதிகளின் 40-சதவிகிதம் தண்ணீருக்குள் என அதிகாரிகள் கணிப்பிட்டுள்ளனர். 50-சதவிகதத்திற்கும் மேலான கட்டிடங்கள் வெள்ள ஆபத்தில் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மணித்தியாலமும் 500,000-லிட்டர்கள் தண்ணீர் ஐலன்டில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.
காய்ந்திருப்பது போல் தோன்றும் இடங்களிலும் மக்கள் நடப்பது உசிதமற்றதென மேயர் தெரிவித்துள்ளார்.
யூலை மாத இறுதிவரை ஐலன்ட் பொது மக்களிற்காக திறக்கப்பட மாட்டாதென நகரம் எச்சரித்துள்ளது. நீர் மட்டம் ஏற்று கொள்ளத்தக்க அளவை அடையும் வரை கால அவகாசம் தேவைப்படும்.
வாரத்திற்கு ஒன்று முதல் 3-சென்ரி மீற்றர்கள் அளவாக மிக மெதுவான வேகத்தில் நீர் மட்டம் குறைந்து வருகின்றதென அதிகாரி தெரிவிக்கின்றார்.