திண்டுக்கல்லில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட கட்சி பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுக்காக போடப்பட்ட நாற்காலிகளில் பெரும்பாலானவை காலியாகவே இருந்தது விவாத பொருளாக மாறியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது.
பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கே இருந்து வந்தது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் கழக வளர்ச்சி குறித்து செயல் வீரர்கள் கூட்டம் ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ், ஸ்டாலின் டீ குடித்தது என்ன அபூர்வ செயலா? நான் டீக்கடையே நடத்தியிருக்கிறேன் என கூறினார்.
மேலும், தன்னுடைய நிதி அமைச்சர் பதவியை விட்டு கொடுப்பதாக கூறும் டி.ஜெயகுமாருக்கு எவ்வளவு திமிர் என ஓ.பி.எஸ் ஆவேசமாக பேசினார்.
ஓ.பி.எஸ் சிறப்புரை ஆற்றிக்கொண்டிருக்கையில், தொண்டர்களுக்காக போடப்பட்ட நாற்காலிகளில் பெரும்பாலானவை காலியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.