முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பு அவலத்தின் அந்த நாட்களை அங்கிருந்து நேரடியாக அனுபவித்த எம்மால் மறக்க முடியுமா.
ஆண்டு ஆயிரமானாலும் அந்த நினைவுகள் அழியுமா? 2009 என்று சொன்னாலே முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் பேரவலம் தான் எம்மனங்களில் ஆழப்பதிந்துள்ளன.
இந்நாட்களை மறக்க முடியாது. அன்றைய நாட்களை இன்றளவிலும் எங்கள் உள்ளக்கிடக்கைகளில் வடுக்களாய் மாறியிருக்கின்றன. அவற்றின் பதிவுகள் சில இங்கே.