ரொறொன்ரோ-ஸ்காபுரோவில் 80-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை இவரதுஹொன்டா செடான் ஸ்காபுரோவில் கடை ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விக்டோரியா பார்க் மற்றும் எல்ஸ்மியர் வீதியில் பார்க்வே மோலில் அமைந்துள்ள ஸ்ரேப்பிள்சின் அவுட்லெட் கடையில் காலை 11.30மணியளவில் சம்பவம் நடந்ததாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்திற்கு சென்ற பொலிசார் கார் சேதமடைந்திருப்பதை கண்டுள்ளனர்.
மோதியதற்கான காரணம் தெளிவாக தெரியவரவில்லை என கான்ஸ்டபிள் அலிசன் டக்ளஸ் கொக் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் காயம் குறித்த தீவிர தன்மையும் தெரியவரவிpல்லை என அறியப்படுகின்றது.
கட்டிட அமைப்பில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.