இன்று முதல் ஒரு பிசியான டவுன் ரவுன் குறுக்குசந்தி மூன்று வாரங்களிற்கு மூடப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிரிசி ட்ராக் மாற்று வேலைகள் செய்வதற்காகவும் வீதி மற்றும் நடைபாதை திருத்த வேலைகள் காரணமாகவும் டன்டாஸ் மற்றும் பார்லிமென்ட் வீதிகள் இன்று முதல் யூன் மாதம் 5ந்திகதி வரைக்கும் மூடப்படுகின்றது.
ட்ராக் புனரமைப்பு கட்ட திட்டம் நடை பெறும் போது பின்மாலை நேரங்கள் மற்றும் இரவு பூராகவும் வேலைகள் இடம்பெறலாம் என ரிரிசி கூறுகின்றது.
போக்குவரத்து ஷெயர்போன் வீதியில் மேற்கு நோக்கி திசைதிருப்படும் எனவும் ஜெராட் வீதி கிழக்கிலிருந்து வடக்கு நோக்கியும் றிவர் வீதி கிழக்கு நோக்கியும் சட்டர் வீதி தெற்கு நோக்கியும் திசை திருப்பப்படும்.
505 டன்டாஸ் வீதிக்கார் பே வீதி மற்றும் புறோட்வியு அவெனியுவிற்கிடையில் திசை திருப்படும்.
குறிப்பிட்ட குறுக்கு சந்தியில் பல வேலைகள் நடை பெற இருப்பதால் இடையூறுகள் ஏற்படலாம் என மேயர் ஜோன் ரொறி தெரிவித்தார்.