Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சசிகலாவை வசைபாடிய ஜெயலலிதா: ரகசியமாக வீடியோ எடுத்த செவிலியர்

May 13, 2017
in News
0
சசிகலாவை வசைபாடிய ஜெயலலிதா: ரகசியமாக வீடியோ எடுத்த செவிலியர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை பல அரசியல் கட்சியினர் எழுப்பி வரும் நிலையில், ஜெயலலிதா தொடர்பான வீடியோ ஒன்று சசிகலா குடும்பத்தாரிடம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் சசிகலா குடும்பம் தான் ஜெயலலிதாவை கொன்றார்கள் என கடுமையாக சாடி வந்தனர்.

இதனால் சசிகலா குடும்பத்தின் மீது ஒரு எதிர்மறையான கருத்தே நிலவி வந்தது. இதனை ஓபிஎஸ் அணியினரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சசிகலாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தான் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், அதை எப்பொழுது வேண்டுமானாலும் வெளியிடுவோம் என கூறியிருந்தார்.

இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியும் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது எடுத்த வீடியோ இருப்பதாகவும் அதனை எந்த நேரத்திலும் வெளியிடுவோம் என கூறி பரபரப்பை மேலும் கூட்டினர்.

இந்நிலையில் அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்ற தகவல்கள் தற்போது பரவி வருகிறது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது சசிகலாவை கடுமையாக திட்டியது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும் ஜெயலலிதாவின் அரசியல் எதிரியையும், அவரது குடும்பத்தையும் கேவலமாக பேசும் காட்சிகள் உள்ளதாகவும், இந்த வீடியோ வெளியிட முடியாத நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அரசியல் ரீதியாக ஜெயலலிதாவின் புகழுக்கு இந்த வீடியோ உலை வைத்துவிடும் எனவும் சசிகலா குடும்பம் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

அப்பல்லோ செவிலியர் ஒருவர் மூலம் இந்த வீடியோ ரகசியமாக எடுக்கப்பட்டதாகவும் இதனை சசிகலா குடும்பத்தினர் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ எடுத்த செவிலியரும் இதனை வெளியில் சொல்லாமல் ரகசியமாக காத்து வருகிறார். ஆனால் இந்த வீடியோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளிவரலாம் என கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

சாலையில் தீப்பிடித்து எரிந்த இளைஞர்: காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்

Next Post

தென்கொரியாவின் ஜனாதிபதி மாளிகை அழிக்கப்படுமா?-புகைப்படத்தால் பதற்றம்

Next Post

தென்கொரியாவின் ஜனாதிபதி மாளிகை அழிக்கப்படுமா?-புகைப்படத்தால் பதற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பொதுநலவாய விளையாட்டு | ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை

பொதுநலவாய விளையாட்டு | ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை

August 1, 2026
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பூவரசங்குளம், கற்பிட்டி பகுதிகளில் இருவர் கைது!

August 1, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

அநுரவுக்கு எதிராக அவதூறு பரப்பிய காவல்துறை அதிகாரி அதிரடி கைது!

August 1, 2026
டி. இமான் வெளியிட்ட ‘நிறம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

டி. இமான் வெளியிட்ட ‘நிறம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

August 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures