கனடா பிரதமரின் அதிரடி முடிவு!

கனடாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களே அதிகம். சுமார் 39 சதவீதம் பேர் உள்ளனர். மற்ற கிறிஸ்தவர்கள் 29 சதவீதம். அதற்கடுத்தபடியாக எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் தான் அதிகம். சுமார் 24 சதவீதம் பேர் உள்ளனர். இஸ்லாமியர்கள் 3.2 சதவீதம் உள்ளனர்.

இந்நிலையில் கனடாவின் மேற்கு மாகாணமான Saskatchewan இல், கத்தோலிக்க பள்ளிகளில் படிக்கும், கத்தோலிக்கர் அல்லாத மாணவர்களுக்கு உதவித் தொகையை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் பல்லாயிரம் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாகாணத்திற்கு சென்ற கனடா பிரதமர், நீதிமன்றத்தின் உத்தரவிற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில முதலமைச்சர் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் தனது தலைமையிலான மத்திய அரசு அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்கர்கள் அதிகம் இருந்தும், அவர்கள் எதிர்ப்பார்கள் என்று தெரிந்தும் சிறுபான்மை மதத்தவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்துள்ளார் கனடா பிரதமர்.

மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ மக்களை பிளவுபடுத்துவதை விரும்பாதவர் கனடா பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *