நமது முன்னோர்கள் அவர்களது வாழ்நாளில் தங்களது ஊர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கையின் வரப்பிரசாதங்களை நமக்கு விட்டு சென்றிருக்கிறார்கள்.
கிராமத்தில் பெரும்பாலும் வீடுகள் மற்றும் தெருக்களில் வேப்பமரம் வளர்த்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பார்கள். இதில் என்ன இருக்கிறது எனன்று நீங்கள கேட்கலாம்.
வேப்பமரத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதன் இலை, பூ, என அனைத்துமே பயன்தரக் கூடியவை. கிராமத்தில் பெரும்பாலான வயதானவர்கள் வேப்பங்குச்சியால் தான் பல் துலக்குவார்கள்.
தற்போது ஊர்க்காட்டில் இலவசமாக கிடைத்து கொண்டிருந்த இந்த வேப்பங்குச்சிகளின் விலை என்ன தெரியுமா? 10 குச்சிகள் கொண்ட ஒரு பாக்கெட் விலை ரூ.700க்கு விற்கப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா! ஆம் இதுதான் இன்றைய நிலைமை.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வேப்பங்குச்சிககைள பாலீதின் பேக்குகளில் பேக் செய்து இணையதளங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நாம் எதை எல்லாம் நாகரீகம் இல்லை என்று தூக்கி எறிகிறோமோ, அதன் பயன்கள் அறிந்து வெளிநாட்டினர் விரும்பி பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டு மோகத்திற்கு அடிமையாகாமல் இனிமேலாவது நம் முன்னோர்களின் வழி நடப்போம்.