குடியுரிமைக்கான விதிகளை கனடா தளர்த்தும் அதேவேளை குடியுரிமைக்கான அவற்றை மேலும் இறுக்குகின்றது ஆஸ்திரேலியா

பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் அரசின் கீழ் கனடா தனது குடியுரிமையைப் பெற்றுக்கொள்வது தொடர்பான சட்டங்களை மேலும் தளர்த்தியுள்ளது.

இதேவேளை ஏனைய மேற்கத்திய நாடுகள் தத்தமது நாடுகளில் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டங்களை மென்மேலும் இறுக்கி வருகின்றமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஆஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியுரிமை வலையமைப்பில் அண்மையில் பாரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி இருந்தார். மேலும் ஆங்கில மொழித் தேர்ச்சிப் பரீட்சை மற்றும் ஆஸ்திரேலியா நாடு தொடர்பான அறிவுப் பரீட்சை என்பன மேலும் தரமும் உயர்த்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

கனடாவில், முன்னைய பழமைவாத அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட இறுக்கமான குடிவரவு விதிமுறைகளை லிபரல் அரசு தளர்த்தியுள்ளது. புதிய குடிவரவாளர்கள் இலகுவாகக் கனேடியக் குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை லிபரல் அரசு அறிமுகம் செய்துள்ளது.

புதிய குடிவரவாளர்கள் 54 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆங்கில மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் இருந்து விலக்களிக்கப்படுவதற்கு லிபரல் அரசு சட்டமூலம் -6 இன் மூலம் வழிசமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி பேசும் நாடுகளில் மிகத்தளர்வான குடிவரவு விதிகளைக் கொண்ட நாடாக தற்போது கனடா விளங்குகிறது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *