வட கொரியாவிற்கு எதிரான யுத்தத்தில் களம் இறங்கும் கனடா

1953-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளுடன் கனடா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக மக்களை காப்பாற்ற வட கொரியாவிற்கு எதிரான யுத்தத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பங்கேற்க கனடா தயாராக உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

வட கொரியாவின் அணு ஆயுத தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கொரியா தீபகற்பத்திற்கு அமெரிக்காவின் போர்க்கப்பல் அனுப்பப்பட்ட நாள் முதல் யுத்தம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வட கொரியாவின் எல்லையில் சீனா தனது ராணுவ தளவாடங்களை நிலை நிறுத்தியுள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவிற்கு ஆதரவாக ராணுவ பயிற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வட கொரியாவால் யுத்தம் ஏற்படும் சூழல் உருவானால் ஐக்கிய நாடுகளுக்கு உதவும் வகையில் கனடா ராணுவமும் யுத்தத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கபடுகிறது.

மேலும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் 1953-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளுடன் கனடா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *