Project Raphael என பெயரிடப்பட்ட நான்கு வருட செயற்பாடு-சிறுவர் பாலியல் தொழிலாளர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட- யோர்க் பிராந்தியம், ரொறொன்ரோ வடக்கு ஆகிய இடங்களில் 100-ற்கும் மேற்பட்ட மனிதர்களை கைது செய்ய வழிவகுத்தது.
இச்சிறுவர்கள் 13வயதிற்கும் 16வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இரகசிய நடவடிக்கை மூலம் சிறுவர்களுடன் இணையத்தினூடாக பாலியல் தொடர்புகளை வாங்க முனைந்தகிட்டத்தட்ட 104மனிதர்களை கைது செய்ததாக யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் ஒன்ராறிவின் பகுதிகளில் வசித்தவர்கள் ஆனால் குற்றம் சாட்டப்பட்ட குற்றங்கள் யோர்க் பிராந்தியத்தில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த மனிதர்கள் 21-முதல் 71 -வயதுகளில் உள்ளவர்களெனவும் சிறுவர்களுடன் 30-முதல் 60-நிமிடங்கள் வரையிலான சந்திப்பிற்கு 80 டொலர்கள் முதல் 300-டொலர்கள் வரை வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
துரதிஸ்டவசமாக இந்த மனிதர்களில் பெரும்பாலானவர்கள் திருமணமானவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறைந்த வயது பாலியல் தொழிலாளர்கள் இணையத்தில் இந்த மனிதர்களுடன் பேசினால் 18-வயதிற்குட்பட்ட ஒருவருடன் பாலியல் சேவைகளை பெற முயன்ற மற்றும் இணையத்தள வசப்படுத்தல் போன்ற குற்றங்கள் சுமத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரனையில் பொலிசார் 85-பெண்களுடன் தொடர்பு கொண்டதாகவும் இவர்கள் இணைய பாலியல் வியாபாரத்தில் ஈடுபாடு கொண்டவர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் உடல்ரீதியான துன்புறுத்தல்களிற்கு ஆட்பட்டுள்ளனரெனவும் தெரியவந்துள்ளது.
மனித கடத்தல் உலகம் ஒரு அசிங்கமான உலகம் என பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.பலரின் வாழ்க்கை நாசமாக்கப்பட்டதை நாம் காண்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விபச்சார புரோக்கர்கள் வாடிக்கையாளர்களுடன் பெண்களை தொடர்பு படுத்த சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனரென தெரிவித்த அதிகாரி ட்ரூயொங் பிள்ளைகளின் இணையத்தள நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு பெற்றோர்களை வலியுறுத்துகின்றனர்.