பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ரயில் நிலையத்தில் மரம் நபர் ஒருவன் கத்தியுடன் சுற்றித் திரிந்ததை கண்ட மக்கள் உடைமைகளை விட்டு பதறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gare du Nord ரயில் நிலையத்திலே இச்சம்பவம் இடம்பெற்றள்ளது. குறித்த ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவன் கத்தியுடன் சுற்றித் திரிந்து பீதியை கிளப்பியுள்ளான்.
இதைக்கண்ட பயணிகள் தங்களது உடைமைகளை ரயில் நிலையத்திலேயே விட்டுவிட்டு பதறியடித்து ஓடியுள்ளனர். சம்பவம் குறித்து உடனே பொலிசாருக்கு எச்சரிக்கை அளிக்க சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் மர்ம நபரை துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 20 வயது மதிக்கத்தக்க மலியன் என்ற இளைஞர் என்றும், அவரை பயணிகள் பலர் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து Gare du Nord ரயில் நிலையம் மாலை 4 மணிவரை மூடப்பட்டடுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.