ரொறொன்ரோ-வெள்ளிக்கிழமை காலை TTC சுரங்க ரயில் பாதை சேவைகள் லைன் 1 மற்றும் லைன் 2 இரு பாதைகளும் யங்-புளோர் நிலையத்தில் பாதிப்பிற்குள்ளாகின.
இச்சம்பவம் காலை 8.30மணியளவில் நடந்தது.கட்டாய வெளியேற்றம் ஏற்படுத்தப்பட்டது.இச்சம்பவத்தால் அரை மணித்தியால தாமதம் மற்றும் நெருக்கடியான மேடைகள் போன்ற அசௌகரியங்கள் ஏற்பட்டன.
பொதுமக்கள் பாதுகாப்பிற்கு பங்கம் எதுவும் நிகழவில்லை.
புலன்விசாரனைக்காக பொலிசார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.
இதற்கான காரணம் மனிதன் ஒருவர் திருடிய சூட்கேஸ் ஒன்றை ரயில் பாதையில் வீசி எறிந்தமையே. இச்சம்பவம் இரு பாரிய லைன்களிலும் போக்குவர்த்து ஸ்தம்பிக்கவும் தாமதத்திற்கும் வழிவகுத்துள்ளது.
பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்ட சூட்கேஸ் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்பின.