பிரித்தானியாவில் மகாத்மா உருவம் பொறித்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் பவுண்டுகளுக்கு (இலங்கை மதிப்பில் கிட்டதட்ட ரூ.9 கோடிக்கு) ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
கடந்த 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தி உருவப் படத்துடன் வெளியிடப்பட்ட 4 தபால் தலைகளே இவ்வாறு ஏலம் விடப்பட்டுள்ளது. இதுபோன்ற தபால் தலைகள் உலகளவில் இப்போது 13 மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 4 அஞ்சல் தலைகள் லண்டனில் ஸ்டான்லி கிப்பன்ஸ் என்ற வர்த்தகரால் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவற்றை அவுஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் வாங்கி உள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. இந்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் (இலங்கை மதிப்பில் கிட்டதட்ட ரூ.9 கோடிக்கு) ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
இந்திய அஞ்சல் தலைகள் இந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்பனை ஆகி இருப்பது இதுவே முதல் முறை.