போருக்கு தயாராகிறதா அமெரிக்கா?

வடகொரியாவின் மிரட்டலை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா தன்னிடம் உள்ள பி61-12 அணுகுண்டுகளை மேம்படுத்தும் சோதனைகளை, தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெவடா பாலைவனப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், எப்-16 போர் விமானம் மூலம் வீசப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வடகொரியாவின் முயற்சிக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துவந்தாலும், தற்போது தன்னிடமுள்ள அணுகுண்டுகளை மேம்படுத்தும் அமெரிக்காவின் திட்டம் மிகவிரைவில் வடகொரியாவிற்கு பதிலடி கொடுப்பதற்கு தயாராகுவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தில் பி61-12 என்ற அணுகுண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டுவிட்டாலும், இதன் ஆயுளை நீடிக்கும் வகையில், இந்த குண்டுகளில் சில மாற்றங்கள் செய்து மேம்படுத்தும் சோதனைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இந்த சோதனை குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“பி61-12 மாதிரி குண்டு டோனோபா என்ற சோதனை மையத்தில் உள்ள வறண்ட ஏரி பகுதியில் விழுந்து மிகப்பெரிய அளவில் தூசியை கிளப்பியது. இந்த மாதிரி குண்டின் பின்பகுதியில் அது பயணம் செய்வற்கான எரிபொருள் மட்டுமே இருக்கும், அதன் முன்பகுதியில் வெடிபொருள் இருக்காது.

விமானத்தில் இருந்து குண்டு ஏவப்பட்டவுடன், அது இலக்கை தாக்கும் காட்சிகள் தொலைநோக்கி மற்றும் தொலைதூர கெமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. குண்டு விழுந்த இடத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதில் புதைந்த மாதிரி குண்டு மீட்கப்பட்டு, மீண்டும் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது” என கூறினார்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் எனவும் 2020ஆம் ஆண்டளவில் பி61-12 அணு குண்டு மேம்பாட்டு திட்டம் முடிவடைந்துவிடும் எனவும் அமெரிக்க அணு பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *