9-மாத கர்ப்பினி மனைவியை கொன்ற கணவன்!

ரொறொன்ரோ–பிக்கரிங்கை சேர்ந்த மனிதன் ஒருவர் கர்ப்பினியான தனது மனைவியை கொலை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இவர் மீது முதல் தர  கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக டர்காம் பிராந்திய பொலிசார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
27-வயதுடைய அரியானா கோபெர்ட்கான் என்வர் வின்வில் வீதி-புறொக் மற்றும் ரான்ரம் வீதிக்கிடையில் அமைந்துள்ள வீடொன்றில் ஏப்ரல் 7 இரவு 9.45மணியளவில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார். உள் வீட்டு தொந்தரவுகள் சம்பந்தமாக அழைக்கப்பட்ட தகவலை தொடர்ந்து கண்டு பிடிக்கப்பட்டது.
இவர் ஒன்பது மாத கர்ப்பினியாவார். “அதிர்வின் வெளிப்படையான அறிகுறிகள்” தென்பட்டதாக புலன் விசாரனையாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை.
அன்றய தினம் இவரது கணவனான 25-வயதுடைய நிக்கலஸ் ரெய்லர் பெயிக் என்பவருக்கு பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. ஒரு நாள் கழித்து இவர் மார்க்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவரது வாகனம் 2015 இன்வினிட்டி செடான் ஒன்று ரொறொன்ரோ பீச்சர்ஸ் பகுதிதியல் அனாதரவாக விடப்பட்டு கிடந்து ஏப்ரல் 10 கண்டுபிடிக்கப்பட்டது.
வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான போது இவர் மீது புதிய குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

prg

prg1

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *