மொன்றியல் தெற்கு பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றின் நீட்டத்தில் கார் ஒன்று தவறான பாதையில் பயணித்ததால் எஸ்யுவி ஒன்றுடன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மற்றும் வேறொரு பெண் உட்பட நால்வரும் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் செவ்வாய்கிழமை காலை நடந்துள்ளது.
80-வயதுடைய மனிதர் எதிர்வந்த போக்குவரத்து பாதையில் தனது வாகனத்தை செலுத்திவந்ததால் நெடுஞ்சாலை 30 மொன்றியல் தெற்கிற்கு அருகில் எஸ்யுவி ஒன்றுடன் மோதியுள்ளதாக கியுபெக் மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தவறான பாதையில் வந்த வாகனத்தின் சாரதி 81-வயதுடைய பெண் ஒருவர் மற்றும் 15-வயதுடைய பையன் ஒருவன் மூவரும் கொல்லப்பட்டனர். மூவரும் ஒரே குடும்பத்தினராவர். இவர்கள் ஒன்ராறியோவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மற்றய வாகனத்தின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த 56-வயதுடைய பெண் வைத்தியசாலையில் இறந்து விட்டார்.
976 total views, 663 views today