ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய முயன்ற கனடியர் கைது

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சிகள் மேற்கொண்ட கனடியர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கனடாவின் டொராண்டோ நகரை சேர்ந்தவர் Pamir Hakimzadah (27) இவர் இரு வருடங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் தன்னை இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

பின்னர் துருக்கி நாட்டுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் அவர் சேர முயன்றுள்ளார்.

பின்னர் Pamir துருக்கி அரசால் கைது செய்யப்பட்டு சில காலம் கழித்து கனடாவுக்கு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளார்.

இது குறித்து கனடாவின் பாதுகாப்பு புலனாய்வுச் சேவை நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் Phil Gurski கூறுகையில், இப்படி தீவிரவாத இயக்கத்தில் சேர நினைக்கும் கனடியர்களை இங்கேயே கைது செய்து விடுவோம்.

தற்போது தான் முதல் முறையாக வேறு நாட்டுக்கு தப்பி சென்றவரை பொலிசார் பிடித்துள்ளனர் என கூறியுள்ளார்.

தீவிரவாத செயலில் ஈடுபட கனடாவை விட்டு வெளியே சென்றால் அது அங்கு பெருங்குற்றமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *