Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆர்கே நகரில் டிடிவி தினகரன் அணியினர் விடிய விடிய பணப்பட்டுவாடா

April 6, 2017
in News
0

சென்னை : ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விடிய விடிய பணம் பட்டுவாடா செய்தனர். தடுக்க சென்ற திமுகவினரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தனர். பணம் விநியோகம் செய்ததாக ஒரே இரவில் 34 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், பலர் தப்பி ஓடிவிட்டனர். தடுக்க வந்த திமுகவினர் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் மூலம் திட்டமிட்டு தேர்தலை நிறுத்த டிடிவி தினகரன் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக (புரட்சி தலைவி அம்மா) சார்பில் மதுசூதனன், அதிமுக (அம்மா) சார்பில் டிடிவி.தினகரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன், பாஜ சார்பில் கங்கை அமரன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 62 பேர் போட்டியிடுகின்றனர். அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2வது மற்றும் 3வது இடம் யாருக்கு என்பதில், மதுசூதனன், டிடிவி தினகரன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கணிசமான ஓட்டுக்கள் மதுசூதனனை விட அதிகமாக வாங்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் களம் இறக்கியுள்ளனர். டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக தொகுதியில் உள்ள காலியாக உள்ள வீடுகள் மற்றும் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து வெளியூர் ஆட்களை தங்க வைத்து ‘டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி ஆர்.கே.நகர் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் பணியில் முழுவீச்சில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். இதை அறிந்த திமுகவினர், அவற்றை தடுக்க முற்பட்டனர். அப்போது, தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த மதுரையை சேர்ந்த பிரபு (30) என்பவரை திமுகவினர் பிடிக்க முற்பட்டனர். அப்போது, 50க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன், திமுகவினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதில், நேதாஜி நகரை சேர்ந்த ஷேக் (26), வினோபா நகரை சேர்ந்த பார்த்தசாரதி (28) ஆகியோருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த அவர்கள் அலறி துடித்தனர்.

மேலும், அப்பகுதியில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் ஒரு பெண் மருந்து வாங்கி கொண்டிருந்தார். அவரது கணவர், அருகில் பைக்கில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த தினகரன் கோஷ்டினர், அந்த பெண்ணின் கணவர் மீது சரமாரியாக தாக்கினர். அவரது பைக்கை அடித்து சுக்கு நூறாக நொறுக்கினர். உடனே 3 பேரையும் திமுகவினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் திமுகவினர் புகார் செய்தனர். இதற்கிடையில் புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் வீடு வீடாக தினகரன் கோஷ்டியினர் பணம் விநியோகித்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர். பிடிபட்டவர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வம் (26) என தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவில் வீடு வீடாக பணம் விநியோகித்து கொண்டிருந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (37) என்பவரை பொதுமக்கள் பிடித்து ரூ.36 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

காசிமேடு காசிபுரம் பி பிளாக் பகுதியில் பணம் விநியோகித்து கொண்டிருந்த 6 பேரை பொதுமக்கள் பிடித்தனர். அவர்கள், சீர்காழியை சேர்ந்த ராஜா (40), மணிபாரதி (30), ஞானசேகர் (62), சந்திரமோகன் (40), முருகன் (38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தண்டையார்பேட்டை அஜீஸ் நகரில் பணம் விநியோகிப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதிகாரிகளை பார்த்ததும், பணம் விநியோகித்து கொண்டிருந்தவர்கள் ரூ.10 லட்சத்தை ரோட்டில் வீசிவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணம் கொடுத்து அராஜக செயலில் ஈடுபட்டதாக 25 பேரை ஆர்.கே. நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் 35 பேரை நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை போலீசார் கைது செய்தனர். சுமார் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே, வட்ட செயலாளர் ரவிக்கு சொந்தமான மீன் அங்காடியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அலெக்சாண்டர் எம்எல்ஏ, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் ராேஜந்திரன் மற்றும் ஆதரவாளர்கள் முகாமிட்டிருந்தனர். இவர்கள், ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை தெரு வாரியாக ஆட்டோ, கார்களில் அழைத்து வந்து பணப்பட்டுவாடா செய்துள்ளனர். ஆண்களும் பெண்களும் வரிசையாக வந்து பணம் பெற்று சென்றனர். ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணப்பட்டுவாடா நடந்த இடத்தின் அருகில்தான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இருப்பினும் எந்த இடையூறும் இன்றி பணப்பட்டுவாடா நடந்துள்ளது.
திருவொற்றியூர் தேரடியில் உள்ள முன்னாள் எம்எல்ஏ குப்பன் அலுவலகத்தில், காசிமேடு எஸ்.என்.செட்டி தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த அலுவலகத்தில் பெண்கள் சிலர் காத்திருந்தனர். இதுபற்றி மக்கள் விசாரித்தபோது பண பட்டுவாடா நடைபெறுவது தெரிந்தது.

தகவலறிந்து திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த 15க்கும் மேற்பட்ட பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் வசிப்பதாகவும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கூறியதன் பேரில் வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த அலுவலகத்தை சோதனை செய்தபோது, பலர் பின்பக்கமாக தப்பி சென்றுவிட்டனர். இதனால் அந்த அலுவலகத்துக்கு போலீசார் பூட்டு போட்டனர். சன்னதி தெருவில் உள்ள தனியார் சங்க அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் லுங்கியுடன் அமர்ந்து கொண்டு வாக்காளர்களை ஆட்டோவிலும் பைக்கிலும் வரவழைத்து நேற்று காலை 7 மணி வரை பணம் வழங்கியதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். நேதாஜி நகரில் அமைச்சர் செல்லூர் ராஜு, தங்கதமிழ்செல்வன் எம்எல்ஏ தலைமையில் நள்ளிரவில் வீடு, வீடாக பணம் விநியோகம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வஉசி நகரில் அமைச்சர் உதயகுமார், அவரது ஆதரவாளர்கள் வீடு, வீடாக சென்று தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பி பணம் கொடுத்துள்ளனர். ஒரே நாள் இரவில் ரூ.50 கோடிக்கு மேல் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக வேட்பாளர் மருதுகணேஷ், நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’தேர்தல் அமைதியாக நடக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது பீதியாக உள்ளது. வெளியே செல்ல பயமாக உள்ளது. கொலை வெறி தாக்குதல் நடக்கிறது. வெளியூர்வாசிகள் தொகுதியில் வலம் வந்து எங்களை மிரட்டுகிறார்கள். அவர்களை வெளியே அனுப்பினாலே தேர்தல் அமைதியாக நடக்கும். அவர்கள் வெளியே சென்றால் நல்லது’’ என்றனர்.
இதற்கிடையில் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர் சுதர்சனம், கீதா ஜீவன் எம்எல்ஏ, வகாப், பகுதி செயலாளர் தனியரசு, முன்னாள் கவுன்சிலர் ஏ.வி.ஆறுமுகம், புழல் நாராயணன் உள்பட ஏராளமான தொண்டர்கள் நேற்று காலை ஆர்.கே.நகர் காவல் நிலையம் சென்றனர்.

பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பிடிபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார், ‘’புகார் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் புகார் கொடுத்தனர். இதேபோல் ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட 47வது வட்ட அதிமுக பிரமுகர் ஒருவரது காரில் வைத்து பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அங்கு சென்று காரை சோதனை செய்தபோது, ரூ.40 ஆயிரம் இருந்தது. இதையடுத்து பணத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

பிடித்து கொடுத்தவர்களை அதிகாரிகள் விட்டுவிட்டனர்

வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் எம்எல்ஏ ஆதரவாளர், ஆர்கே நகர் பகுதி செயலாளர் சந்தானம், வட்ட செயலாளர் கோவிந்தராஜ், பகுதி பிரதிநிதி நாகராஜ் ஆகியோர் நேற்று காலை 38வது வார்டில் வீடு வீடாக சென்று பணம் விநியோகம் செய்தனர். வாக்காளர்களுக்கு தலா வாக்குக்கு ரூ.4000 கொடுத்தார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்களும், திமுகவினரும் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர், போலீசாருக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். தேர்தல் அதிகாரி வந்து, அவர்களை, கைது செய்யாமல், பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குற்றவாளிகளை நீங்களும் பிடிக்க மாட்டீர்கள். நாங்கள் பிடித்து கொடுத்தாலும், கைது செய்யாமல் பேச்சு வார்த்தை நடத்துகிறீர்கள். எதற்காக நீங்கள் தயங்கவேண்டும் என அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், மக்களிடம் பிடிப்பட்ட 3 பேரிடம் இருந்து சுமார் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அனைத்து புத்தம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள். அவர்களை வாகனத்தில் ஏற்றி, கொண்டு சென்றனர். சில மீட்டர் தூரம் சென்றதும், அவர்களை இறக்கிவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், தற்பாது பறக்கும்படையில் இருப்பது மாநகராட்சி அதிகாரிகள்தான். இவர்கள் கீழ்தான் மத்திய பாதுகாப்பு போலீசார் வேலை செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும், மேலிடத்தில் இருந்து போன் வந்ததும், அவர்களை விட்டுவிட்டனர். இதனால், வடமாநிலத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு போலீசாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றனர்.

1.5 லட்சம் பேருக்கு விநியோகம்

ஆர்.கே.நகரில் ஒவ்வொரு வார்டுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இரவில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில், தினகரன் அணியினர், வீடு, வீடாக சென்று பணம் விநியோகம் செய்தனர். நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் 1.20 லட்சம் பேருக்கு விநியோகம் செய்தனர். பின்னர் காலை முதல் பிற்பகலுக்குள் மேலும் 30 ஆயிரம் பேருக்கு விநியோகம் செய்துள்ளனர். ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

இலங்கை அரசிற்கு நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும்! மன்னிப்புச் சபையிடம் முதலமைச்சர்

Next Post

ஜெயலலிதா குற்றவாளி அல்ல! அபராதம் வசூலிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Next Post
ஜெயலலிதா குற்றவாளி அல்ல! அபராதம் வசூலிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜெயலலிதா குற்றவாளி அல்ல! அபராதம் வசூலிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures