தீயிலிருந்து மூவரின் உயிரை காப்பாற்றிய புகை கண்டறியும் கருவி!

ரொறொன்ரோ–இயக்கத்தில் இருந்த புகை கண்டறியும் கருவி தாய் ஒருவர் மற்றும் அவரது இரண்டு இளம் பிள்ளைகள் மூவரினதும் உயிரை காப்பாற்றிய சம்பவம் மிசிசாகாவில் நடந்துள்ளது.
மோர்னிங் ஸ்ரார் டிரைவிற்கு அருகில் கோர்வே டிரைவில் அமைந்துள்ள தொடர் மாடி கட்டிடமொன்றில் இச்சம்பவம் செவ்வாய்கிழமை நடு இரவு நடந்துள்ளது.
கவனிக்காத நிலையில் விடப்பட்ட மெழுவர்த்தி தீ பரவ காரணமாக இருந்ததென மிசிசாகா தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பெண் ஒருவர் அவரது ஒன்பது வயது மகன் மற்றும் ஆறு வயது பெண் மூவரும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர்.
பாதுகாப்பு காரணமாக தொடர்மாடிக்கட்டிடத்தில் அமைந்துள்ள ஒரு  சில    அலகு   களிலும் வெளியேற்றம் செய்யப்பட்டது.
பிரம்ரன் போக்குவரத்து சேவை பேரூந்துகள் குடியிருப்பாளர்களை தங்குமிடங்களிற்கு கொண்டு சென்றன. பாதிக்கப்பட்ட யுனிட்டிலிருந்த மூவரும் திரும்ப முடியவில்லை.
குறிப்பிடத்தக்க அளவு சேதம் தீயினால் மட்டுமன்றி புகை தண்ணீர் போன்றனவற்றாலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *