ஒட்டாவா– நோபல் பரிசு வெற்றியாளரான மலாலா யுசவ்சாய் அடுத்த வாரம் தனது மதிப்பிற்குரிய கனடிய குடியுரிமையை பெறுகின்றார்.
ஏப்ரல் 12-ந்திகதி இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் போது 19-வயதுடைய பாகிஸ்தானிய பெண்ணான இவர் கனடிய பாராளுமன்றத்திலும் உரையாற்றுவார் என பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவின் காரியாலயத்தில் இருந்த அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதம மந்திரி Stephen Harper இந்த விருதை 2014 அக்டோபர் 22ல் ரொறொன்ரோவில் வழங்குவதாக இருந்தது.
ஆனால் அன்றய தினம் துப்பாக்கிதாரி ஒருவர் பாராளுமன்ற ஹில்லை தாக்கியதுடன் தேசிய போர் ஞாபகார்த்த மண்டபத்தில் போர் வீரர் ஒருவரையும் கொன்ற காரணத்தினால் இந்நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.
2012ல் தலிபான் துப்பாக்கிதாரி ஒருவரால் தலையில் சுடப்பட்டார். பாகிஸ்தானில் பாடசாலையில் இருந்து வீடு நோக்கி பேரூந்து ஒன்றில் சென்று கொண்டிருக்கையில் இக் கொடிய சம்பவம் நடந்தது. இச் சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய யுசாவ்சாயி பெண்கள் உரிமைக்கு ஒரு சர்வதேச சின்னமாகினார்.
கல்வி மூலம் பெண்களின் அதிகாரமளிப்பு மற்றும் அவர்களின் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெண்கள் எவ்வாறு நிலையான அபிவிருத்திக்கு தீவிரமான பங்களிப்பு செய்ய முடியும் என்பன குறித்து மலாலாவுடன் கலந்துரையாட பிரதமர் விரும்புவதாக ட்ரூடோவின் காரியாலம் தெரிவித்துள்ளது.
மதிப்பிற்குரிய கனடிய குடியுரிமை விருது ஆறு பேர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. சுவீடிஷ் ராஜதந்திரி றாஉல் வலென்பேர்க், நெல்சன் மண்டேலா, த டலி லாமா, பேர்மாவை சேர்ந்த ஆங் சான் சூ கியி மற்றும் அஹா கான் ஆகியவர்களாவர். இவர்களை தொடர்ந்து இந்த வரிசையில் மலாலாவும் இடம்பெறுகின்றார்.
அகதிகள் நெருக்கடி குறித்த ஏற்புத்தன்மையில் கனடா மக்கள் உலக நாடுகளில் முன்னணயில் உள்ளதென யுசாவ்சாய் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அழைப்பினால் தான கௌரமடைந்துள்ளதாகவும் வீரர்களின் பெருமையான நாட்டிற்கு வருவதற்கு காத்திருப்பதாகவும் கூறினார்.