81 படகுகளை குண்டுவைத்து தகர்த்த இந்தோனேசிய கடற்படை ..!

எல்லை தாண்டி வந்து மீன் பிடியில் ஈடுபட்ட 81 படகுகளை இந்தோனேசிய கடற்படை குண்டுவைத்து தகர்த்துள்ளது.

இந்தோனேசியா கடல் பகுதியில் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை மீறி வந்து மீன்பிடித்த குற்றத்திற்காக அந்நாட்டு கடற்படையினர் 81 படகுகளை சிறைப்படுத்தியிருந்தனர்.

மேலும் இந்தோனேசியாவின் கடல் எல்லையில் அத்துமீறி வந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்கள் மீது அந்நாடு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கைப்பற்றிய 81 படகுகளை அந்நாட்டு கடற்டபடையினர் குண்டுவைத்து தகர்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

அத்தோடு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியா, எல்லை தாண்டி வரும் படகுகளை அளித்து வருகின்றது. இதனடிப்படையில் இதுவரை சுமார் 317 மீன்பிடி படகுகளை அந்நாட்டு கடற்படையினர் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.intunaseja01intunaseja02intunaseja03

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *