Easy 24 News

நெதர்லாந்திலிருந்து சிட்னி வந்தவருக்கு நேர்ந்த கதி!

நெதர்லாந்தைச் சேர்ந்த backpacker-சுற்றுலாப்பயணி ஒருவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வருவதாக நினைத்துக்கொண்டு, கனடாவிலுள்ள சிட்னி என்ற இடத்திற்குச் சென்றுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Milan Schipper என்ற 18 வயது இளைஞர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்து இங்கே ஒரு வருடம் தங்கியிருக்க திட்டமிட்டிருந்தார்.

இதற்கென சுமார் 800 யூரோக்கள் கொடுத்து விமானப் பயணச்சீட்டையும் Milan Schipper கொள்வனவு செய்திருந்தார்.

சாதாரணமாக சிட்னி வருவதற்கு 1000 யூரோக்கள் வரை விமானக்கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், மலிவு விலையில் தனக்கு விமானப்பயணச்சீட்டு கிடைத்துவிட்டது என்று Milan Schipper மகிழ்ச்சியோடு இருந்திருக்கிறார்.

ஆனால் அவர் வாங்கிய விமானச்சீட்டு கனடாவின் Nova Scotia-விலுள்ள சிட்னி என்ற இடத்திற்கு என்பதை அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் சிட்னி காலநிலைக்கேற்ப உடையணிந்திருந்த அவர், கடும் குளிரான சிட்னி,Nova Scoti- வில் சென்று இறங்கியிருக்கிறார்.

தான் பிழையான திசையை நோக்கிப் பயணம் செய்வதை மிகத் தாமதமாகவே உணர்ந்து கொண்டதாக தெரிவித்த Milan Schipper, விமானப்பணியாளர்களின் உதவியுடன் மீண்டும் நெதர்லாந்துக்கான பயணச்சீட்டைக் கொள்வனவு செய்து வீடு சென்றுசேர்ந்திருக்கிறார்.

தனது இந்த அனுபவத்தை கனடாவின் CBC வானொலியோடு Milan Schipper பகிர்ந்துகொண்டுள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *