கனடா அமெரிக்க எல்லைப்பகுதியின் ஊடாக கனடாவுக்குள் நுழைய முற்படும் பெருமளவிலான அமெரிக்கர்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குறித்த விவகாரம் குறித்து கனடா எல்லைப்பகுதி சேவைகள் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 30,233 அமெரிக்கர்கள் கனடாவுக்குள் நுழைய எல்லையில் தடை விதிக்கப்பட்டனர். கடந்த 2015ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 23,052ஆக உயர்ந்துள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான முக்கியமான தகவல்களை திருடி வெளியிடுபவர்களுக்காகவே இந்த கடும் நடவடிக்கை நடைமுறையில் உள்ளதாக குடிபெயர்பவர்களுக்கான வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதற்கிடையே கனடிய பாடசாலைகள் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாக்கும்

