Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் தண்டிக்குமாறு வலியுறுத்தவில்லை: சீ. வி விக்னேஸ்வரன்

March 28, 2017
in News
0
ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் தண்டிக்குமாறு வலியுறுத்தவில்லை: சீ. வி விக்னேஸ்வரன்

போரின் போது குற்றம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வலியுறுத்துகின்றோமே தவிர ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் தண்டிக்குமாறு வலியுறுத்தவில்லை. அதனையே சர்வதேசமும் வலியுறுத்துகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுவிஸ்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த சந்திப்பின் நிறைவில் கடந்த சனிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க போரினை வெற்றி கொண்ட இராணுவத்தினரை தண்டிக்க இடமளிக்க முடியாதென தெரிவித்துள்ளார்.

அவரின் கருத்து தொடர்பில் ஊடகவியலளார்கள் கேட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சந்திரிக்கா அம்மையார் குறிப்பிட்டது புதுமையானதல்ல. இதே கருத்தினையும் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷவும் குறிப்பிட்டார்.

போரின் போது குற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்குமாறு நாமும் வலியுறுத்துகின்றோம். சர்வதேசமும் வலியுறுத்துகின்றது.

அதனை விடுத்து போரினை வென்ற ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் தண்டிக்குமாறு நாமும் கேட்கவில்லை. சர்வதேசமும் கேட்கவில்லை.

உதாரணமாக ஒரு பாடசாலையினை எடுத்துக்கொண்டால், அந்த பாடசாலையில் ஒரு மாணவன் தப்பு செய்தால், அந்த மாணவனை தண்டிக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக பாடசாலையினை குறை கூறுவதென்பதல்ல. தண்டிப்பதென்பதல்ல.

மேலும் தனிப்பட்ட நபர் ஒருவர் சட்டத்திற்கு முரணான வகையில், போர் நடைபெற்ற காலத்தில் சரி போர் முடிவுற்ற காலத்தில் சரி குற்றமிளைத்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க கோருகின்றோமே தவிர, அனைத்து இராணுவத்தினரையும் தண்டிக்க வேண்டுமென்று எங்கும் கேட்கவில்லை.

இந்த விடயத்தினையே சந்திரிக்கா அம்மையாருக்கும் கூறுகின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

போரில் குற்றச்செயல்கள் இடம்பெற்றன! ஒப்புக்கொள்கிறார் கோத்தபாய

Next Post

கடுமையாக தண்டிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்களுக்கு உணவைத் திருடும் நிலை!

Next Post
கடுமையாக தண்டிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்களுக்கு உணவைத் திருடும் நிலை!

கடுமையாக தண்டிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்களுக்கு உணவைத் திருடும் நிலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures