வீடு ஒன்றில் இருந்து நான்கு சடலங்கள் மீட்பு

வீடு ஒன்றில் இருந்து நான்கு சடலங்கள் மீட்பு

பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியத்தின் மிகவும் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிகிழமை பிற்பகல் கிடைத்த முறைப்பாடு ஒன்றை அடுத்து Ashcroft இற்கு அருகில் Venables Valley பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டை சோதனை செய்த போது அந்த நான்கு சடலங்களும் கண்டுபிடிக்க்பபட்டதாக நேற்றுச் சனிக்கிழமை காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அந்த இடத்தில் பூர்வாங்க சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் உயிரிழந்து கிடந்த நபர்களின் விபரங்கள் எதனையும் அவர்கள் உடனடியாக வெளியிடவில்லை.

பாரிய குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்த்துறைப் பிரிவினர் மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியா மரண விசாரணையாளர்கள் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை இந்த வார இறுதி நாட்களிலும் சம்பவ இடத்தில் மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக  நேற்றுச் சனிக்கிழமை தகவல் வெளியிட்டபோது அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *