Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

12 நாடுகளின் விமான பயணிகளுக்கு அதிரடி தடை விதித்த அமெரிக்க: இந்த முறை என்ன தெரியுமா?

March 22, 2017
in News
0
12 நாடுகளின் விமான பயணிகளுக்கு அதிரடி தடை விதித்த அமெரிக்க: இந்த முறை என்ன தெரியுமா?

12 நாடுகளின் விமான பயணிகளுக்கு அதிரடி தடை விதித்த அமெரிக்க: இந்த முறை என்ன தெரியுமா?

8 மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்களுடன் மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல அமெரிக்கா அதிரடி தடை விதித்துள்ளது.

அமெரிக்க குடிமக்களின் பதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழலாம் என்ற காரணத்தை முன்வைத்து ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அதிரடி அரசாணைகளை பிறப்பித்து வருகிறார்.

அதில், இஸ்லாமியர்கள் பெரும்பாண்மையாக கொண்ட சில நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்கு செல்ல தடை விதித்து உத்தரவிட்டு உலக நாடுகளின் பார்வையை தன்பக்கம் திருப்பினார். இதில் அமெரிக்காவின் பல மாகாணங்களில் எதிர்ப்பு கிளம்பியது, சில மாகாணங்கள் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி நீதிமன்றங்களை நாடின.

இந்த பரபரப்பான சூழலில், அமெரிக்க அரசாங்கம் அடுத்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த முறை எட்டு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களில், விமானிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணிணினி மற்றும் டேப்லட் போன்ற மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கை 10 விமான நிலையங்களில் இயங்கும் ஒன்பது விமான சேவைகளை பாதிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் உளவுத் துறையால் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் மின்னனு சாதனங்களான மடிக்கணினி, டேப்லட்ஸ், கேமராக்கள், டிவிடி சாதனம் மற்றும் மின்னனு விளையாட்டு பொருட்கள் ஆகியவை அடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் அலைபேசிகள், தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.

உள்நாட்டு பாதுகாப்பு துறை, இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது; ஆனால் இன்று செவ்வாய்க்கிழமையன்று இதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தடை கடந்த சில வாரங்களாகவே பரிசீலனையில் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மட்டுமின்றி தடைவிதிக்கப்படவுள்ள நாடுகளின் பட்டியல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Tags: Featured
Previous Post

பன்னீர் செல்வம் உயிருக்கு ஆபத்து!

Next Post

சட்ட விரோதமாக எல்லை கடப்பவர்களை நாடு கடத்த விரும்பும் அரைவாசி கனடியர்கள்.

Next Post
சட்ட விரோதமாக எல்லை கடப்பவர்களை நாடு கடத்த விரும்பும் அரைவாசி கனடியர்கள்.

சட்ட விரோதமாக எல்லை கடப்பவர்களை நாடு கடத்த விரும்பும் அரைவாசி கனடியர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures