ஷாப்பிங் மோல் மேல் இருவிமானங்கள் மோதியதில் ஒருவர் மரணம்!

ஷாப்பிங் மோல் மேல் இருவிமானங்கள் மோதியதில் ஒருவர் மரணம்!

கியுபெக். செயின்ட் புரனோவில் சந்தடிமிக்க ஷாப்பிங் மோல் மீது இரண்டு சிறிய விமானங்கள் வெள்ளிக்கிழமை மோதியுள்ளன. இதனால் விமானி ஒருவர் கொல்லப்பட்டார் மற்றவர் கடுமையான காயங்களுடன் தப்பிவிட்டார்.
காயமடைந்த விமானி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தை பார்த்த சாட்சியங்கள் இருவர் அதிர்ச்சியடைந்ததால் அவர்களிற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விமானங்களில் ஒன்று கடைகளின் கூரை மேல் மோதியுள்ளது. அடுத்த விமானம் வாகன தரிப்பிடத்தில் மோதியுள்ளது.
இரு விமானங்களிலும் ஒவ்வொரு ஆண் விமானி மட்டும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் துண்டுகள் வானில் இருந்து எல்லா இடங்களிலும் பறந்ததை சாட்சியங்கள் கண்டுள்ளனர்.
விமானத்திற்குள் ஓடிச்சென்று பார்த்த போது ஒருவரின் உடல் நொருங்கி கிடந்ததாக தெரிவித்தார் பார்த்தவர் ஒருவர்.
கூரையில் மோதிய விமானத்தில் இருந்து கெரொசின் கசிந்து ஷாப்பிங் மோலிற்குள் வடிய தொடங்கியதால் கட்டிடத்திற்குள் இருந்த அனைவரையும் பொலிசார் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். இரு விமானங்களும் செஸ்னா 152 விமானங்கள் எனவும் கார்கெயரினால்-ஒரு விமான-பயிற்சி அக்கடமியினால் இயக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

plane4plane3plane2plane1

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *