புதையுண்ட காரினால் பரபரப்படைந்த சமூக ஊடகங்கள்!
மொன்றியல் சுற்று புறத்தில் டொலாட்-டெஸ்-ஓமெக்ஸ் பகுதியில் பிறவுன்ஸ்விக் பிளேஸ் வாகன தரிப்பிடத்தில் அனாதரவாக விடப்பட்டிருந்த ஒரு மாஸ்டா ட்ரியுபுட் அப்பகுதியில் செல்லும் பாதசாரிகளை வியப்படைய வைத்துள்ளது. கடந்த இரு மாதங்களாக இந்த வாகனம் அதே இடத்தில் அனாதரவாக விடப்பட்டிருற்துள்ளது. முகநூல் கருத்துரை ஒன்றில் இந்த கார் ஜனவரியில் முதல் முதலாக காணப்பட்டதென கூறப்பட்டிருந்தது.
பனியால் மூடப்பட முன்னர் இவ்வளவு காலமும் ஏன் விடப்பட்டதென குடியிருப்பாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
உரிமத்தகடு புலப்படாத அளவு காரின் பின்பக்கம் பனியால் மூடப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வாகனத்தின் அடையாள எண்ணை கொண்டு வாகனம் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதா அல்லது திருடப்பட்டதா என கண்டறியும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.