பெரிய சரக்கு லாரியை உருட்டித்தள்ளிய கொடிய காற்று!
ஒன்ராறியோ மாகாண பொலிசர் பேர்லிங்டன் ஸ்கைவேயின் இரு வழிகளையும் மூடிவிட்டனர்.டிரக்டர் டிரெயிலர் ஒன்றை பலத்த காற்று ஊதி தள்ளியதால் புதன்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.
தென்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் பிற் பகல் அளவில் காற்றின் தாக்கத்தால் அதன் பக்கவாட்டில் சரிந்து விட்டது. எவரும் காயமடையவில்லை.
பலத்த காற்று காரணமாக ரொறொன்ரோ பெரும்பாகம் விசேட கால நிலை ஒன்றிற்குட்படுத்தப்பட்டிருந்தது.
தென்மேற்கு நோக்கிய காற்று மணித்தியாலத்திற்கு 50முதல் 80 கிலோ மீற்றர்கள் வரை வீசும் எனவும் இதன் காரணமாக மரங்கள் மற்றும் கட்டிடங்கள் பாதிக்கப்படலாம் எனவும் கனடா சுற்று சூழல் எச்சரித்திருந்தது.
பேர்லிங்டன் ஸ்கைவே பாலத்தின் வோட் எரி மற்றும் ரொறொன்ரோ ஞநுறு எல்லை மற்றும் ஈஸ்ட் போட் முதல் நோத்ஷோர் வரை மூடப்பட்டுள்ளது.
பாலம் எப்போது மீள திறக்கப்படும் என்பது தெரியவரவில்லை.