பிரிட்டிஷ் கொலம்பியாவில் நீரின் தரம் குறித்து அச்சம்.
பிரிட்டிஷ் கொலம்பியா Osoyoos பகுதியில் மெதாம்பெடாமைன் போதைப்பொருளை தயாரிக்கும் ஆய்வகம் என்று சந்தேகிக்கப்படும் ஆய்வகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆழமான கிணறுகளிலிருந்து பெறப்படும் நீரை உபயோகிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Osoyoos கிழக்கு குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் வீசப்பட்ட சில அபாயகரமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து உள்துறை சுகாதார அமைப்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவை உள்ளூர் நீர் வளத்தை பாதித்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
Bridesville மற்றும் ரொக் கிரேக்கிற்கு இடைப்பட்ட மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் Bridesville மற்றும் ரொக் கிரேக் பகுதிகளில் பாதிப்;பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெதாம்பெடாமைன் என்பது மைய நரம்பு மண்டலத்தின் செயற்பாட்டை தூண்டக்கூடிய போதை மருந்தாக செயற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.